பள்ளி மாணவராக சிவகார்த்திகேயன்… அந்த படத்துக்கு அப்றம் இப்பதான்!

Webdunia
வியாழன், 21 அக்டோபர் 2021 (17:44 IST)
சிவகார்த்திகேயன் இப்போது நடித்து வரும் டான் படத்தில் பள்ளி மாணவர் வேடத்தில் சில காட்சிகளில் நடித்துள்ளாராம்.

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘டான்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் சிபி சக்கரவர்த்தி என்பவர் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட படப்பிடிப்பு இப்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. படம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் கல்லூரிகளில் படமாக்கப்பட்ட நிலையில் சில காட்சிகள் மற்றும் பள்ளி ஒன்றில் படமாக்கப்பட்டதாம். அதில் சிவகார்த்திகேயன் பள்ளி மாணவராக நடித்துள்ளாராம். 2012 ஆம் ஆண்டு வெளியான 3 படத்தில் அவர் தனுஷுடன் பள்ளி மாணவராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்