தாஜ்மஹாலில் முகாமிட்டுள்ள டான் படக்குழு!

செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (11:32 IST)
சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்தின் படப்பிடிப்பு இப்போது தாஜமஹாலில் நடந்து வருகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘டான்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் சிபி சக்கரவர்த்தி என்பவர் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் அனைவரும் அறிந்ததே. இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா, சூரி, ஷிவாங்கி உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். சிவகார்த்திகேயனின் ஆஸ்தான இசையமைப்பாளரான அனிருத் இசையமைக்கிறார்.

சென்னை மற்றும் பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த நிலையில் இப்போது படக்குழு ஒரு டூயட் பாடலைப் படமாக்க ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலுக்கு சென்று அங்கு காட்சிகளை படமாக்கி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்