எனது இக்கட்டான காலத்தில் மணிரத்னம் உதவினார்… நெகிழ்ந்த சிம்பு!

Webdunia
வியாழன், 30 மார்ச் 2023 (17:26 IST)
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் சுமார் 500 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்து தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த படமாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாவதை அடுத்து நேற்று படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீடு நடந்தது. அதில் படத்தில் நடித்த கலைஞர்களோடு கமல்ஹாசன் மற்றும் சிம்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் பேசிய சிம்பு இயக்குனர் மணிரத்னம் பற்றி நெகிழ்ச்சியாக பேசினார். அப்போது “எனது சினிமா வாழ்க்கையின் இக்கட்டான காலகட்டத்தில் செக்க சிவந்த வானம் படத்தில் வாய்ப்பளித்து உதவினார் மணிரத்னம். அவரிடம் இருந்து நான் நிறையக் கற்றுக் கொண்டேன்” என நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

சிம்பு தொடர்ந்து தோல்வி படங்களாக கொடுத்த போது, செக்க சிவந்த வானம் படத்தில் நடித்து ஒரு ஹிட் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்