வெந்து தணிந்தது காடு… சிம்பு குரலில் முதல் சிங்கிள்… சர்ப்ரைஸ் அப்டேட்!

Webdunia
வெள்ளி, 6 மே 2022 (14:49 IST)
சிம்பு நடிப்பில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் இன்று வெளியாக உள்ளது.

நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அவருக்குப் பெற்றுக் கொடுத்துள்ளது.. இந்நிலையில் அடுத்து அவர் நடிக்கும் திரைப்படமான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் மேலும் பயங்கரமான எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் சிம்பு – கௌதம் – ஏ ஆர் ரஹ்மான் ஆகிய வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர்.

சிம்புவின் மாநாடு படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. சென்னை மும்பை என இரண்டு இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த நிலையில் இப்போது மொத்த படப்பிடிப்பும் முடிந்துள்ளது. இந்நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள ’காலத்துக்கும் நீ வேணும்’ என்கிற முதல் சிங்கிள் பாடல் இன்று மாலை வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த பாடலை சிம்புதான் பாடியுள்ளதாக தற்போது சர்ப்ரைஸாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்