நான் ஏ.ஆர்.ரஹ்மான் கட்சி: பகிரங்கமாக அறிவித்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

செவ்வாய், 3 மே 2022 (18:36 IST)
மொழிப் பிரச்சனையில் நான் ஏ.ஆர்.ரஹ்மான்  கட்சி என முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார் 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழ்தான் இணைப்பு மொழி என்று ஏ.ஆர்.ரஹ்மான்  கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் மொழிப் பிரச்சனையில் நான் ஏ.ஆர்.ரஹ்மான் கட்சி என்றும் தமிழ்தான் இணைப்பு மொழி என்றும் முன்னாள் அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார் 
 
ஹிந்தி தேசிய மொழி என்று நடிகர் அஜய் தேவ்கான் கூறியதற்கு இந்தியாவிற்கு தேசிய மொழி என்று எதுவும் இல்லை என்றும் அவருக்கு இந்த விஷயம் தெரியவில்லை என்றும் மாபா பாண்டியராஜன் கூறியுள்ளார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்