வரேன்.. திரும்ப வரேன்.. துப்பாக்கியோடு சிம்பு! – வெந்து தணிந்தது காடு ஷூட்டிங் ஆரம்பம்!

Webdunia
செவ்வாய், 7 டிசம்பர் 2021 (12:19 IST)
சிம்புவின் மாநாடு படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் அடுத்ததாக வெந்து தணிந்தது காடு படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு பிரச்சினைகளால் சிம்பு படங்கள் வெளியாகாமல் இருந்து வந்தது. வெளியான ஒரு சில படங்களும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் தற்போது வெளியான வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு பெரும் வெற்றி பெற்றுள்ளது.

அதை தொடர்ந்து சிம்பு தனது அடுத்தடுத்த படங்களில் நடிப்பதில் தீவிர முனைப்பு காட்டி வருகிறார். அடுத்ததாக சிம்பு கௌதம் மேனனின் “வெந்து தணிந்தது காடு” படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ட்ரெண்டானது. இந்நிலையில் தற்போது கையில் துப்பாக்கி ஏந்தியபடி ட்விட்டரில் பதிவிட்டுள்ள சிம்பு, வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்