கேரளாவில் திரையரங்கில் வெளியாகும் சூரரை போற்று! – ரசிகர்கள் உற்சாகம்!

செவ்வாய், 7 டிசம்பர் 2021 (10:15 IST)
கடந்த ஆண்டில் ஓடிடியில் வெளியான சூர்யாவின் சூரரை போற்று திரைப்படம் கேரளாவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான படம் சூரரை போற்று. கடந்த ஆண்டு வெளியான இந்த படம் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்ததால் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியானது. எனினும் பரவலாக இந்த படம் வரவேற்பை பெற்ற நிலையில் திரையரங்குகளிலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் படம் வெளியாகி ஒரு ஆண்டு கழிந்த நிலையில் தற்போது கேரளாவில் திரையரங்கில் சூரரை போற்று வெளியாகிறது. கேரள சூர்யா ரசிகர்கள் இணைந்து ரசிகர்களுக்கான சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். டிசம்பர் 26ம் தேதி சூரரை போற்று திரையிடப்பட்ட உள்ள நிலையில் ரசிகர்கள் இதுகுறித்த தகவல்களை ஆர்வமாக ஷேர் செய்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்