மதுரையில் முகமூடி அணிந்து நடிகர் சிம்பு சாமி தரிசனம் - வைரலாகும் புகைப்படம்!

Webdunia
வெள்ளி, 9 அக்டோபர் 2020 (14:58 IST)
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்த சிம்பு

நடிகர் சிம்பு வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் கவனம் செலுத்தி வந்த நிலையில் அதையடுத்து தற்ப்போது இயக்குனர் சுசீந்தரன் சிம்புவிடம் கிராமியக் கதை ஒன்றை சொல்லி அதை ஓகே வாங்கியுள்ளாராம். இந்த படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. நடிகர் சிம்பு இதில் கலந்துகொண்டு நடித்து வருகிறார்

இதற்காக நேற்று திருப்பதி கோவியில் சாமி தரிசனத்திற்காக வந்த சிம்பு சுசீந்தரன் படத்தில் தான் நடித்து வரும் கெட்டப் யாருக்கும் தெரியக் கூடாது என எண்ணி முகமூடி அணிந்து தன் முகத்தை மறைத்துக்கொண்டு காரில் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியது.

இந்நிலையில் இன்று மதுரையில் உள்ள பிரபல மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்ற நடிகர் சிம்பு சாமி தரிசனம் செய்தார். அங்கும் கருப்பு நிறத்தில் முகமூடி அணிந்து சாமி தரிசனம் செய்துள்ளார். இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி தீயாக பரவி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்