நடிகர் சிம்பு லாக்டவுனுக்கு முன்னதாக வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் கவனம் செலுத்தி வந்தார். பின்னர் லாக்டவுன் முடிந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாநாடு படத்தில் மீண்டும் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் இப்போது சுசீந்தரன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.