பத்து தல படத்துக்கு அதிகாலை காட்சிகள் இல்லை.. சிம்பு ரசிகர்கள் அப்செட்!

Webdunia
புதன், 29 மார்ச் 2023 (08:36 IST)
பல இழுபறிகள், தாமதத்துக்குப் பிறகு சிம்பு நடிக்கும் பத்து தல திரைப்படம் ரிலீஸ் கட்டத்தை நெருங்கியுள்ளது. மார்ச் மாதம் 30 ஆம் தேதி (நாளை) ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடந்தது. அதில் படத்தின் நாயகன் சிம்பு உள்ளிட்ட அனைவரும் கலந்துகொண்டனர்.

இதையடுத்து நாளை இந்த படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் சிம்பு ரசிகர்கள் அதிகாலை 5 மணிக் காட்சி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இப்போது அதிகாலை காட்சிகள் இருக்காது என தகவல்கள் வெளியாகியுள்ளன. காலை 8 மணி முதல் படம் திரையிடப்படும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்