''பத்து தல' படத்தின் ‘ஒசரட்டும் பத்து தல’’பாடல் ரிலீஸ்

திங்கள், 27 மார்ச் 2023 (21:18 IST)
பத்து தல' படத்தின் ‘’ஒசரட்டும் பத்து தல’’ என்ற பாடலை படக்குழு  ரிலீஸ் செய்துள்ளது.

கன்னட சினிமாவில் வெளியான மப்டி படம் தமிழில் பத்து தல என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

இப்படத்தை  ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இப்படத்தை கிருஷ்ணா இயக்கி வருகிறார்.   நடிகர் சிம்பு மற்றும் கெளதம் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்

இப்படத்தின் ஷூட்டிங்  நிறைவடைந்த நிலையில் வரும்  மார்ச் மாதம் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

ஏற்கனவே இப்பாடலின் முதல் மற்றும் இரண்டாவது சிங்கில் மற்றும் சாயிஷா நடனத்தில் அமைந்த ஐட்டம் சாங்கான ராவடி என்ற பாடல் ரிலீஸான நிலையில், சமீபத்தில், இப்படத்தின் ஆடியோ வெளீயிடு மற்றும் டிரெயிலர் நிகழ்ச்சி   நடைபெற்றது.

இந்த நிலையில்,இப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒசரட்டும் 'பத்து தல' என்ற பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இப்பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இப்படத்தில் கேன்ஸ்டர் கேஜிஆர்-ஆக சிம்புவும், முதல்வராக கெளதம் மேனனும் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில், பிரியா பவானி சங்கர், கெளதம் கார்த்திக் உள்ளிட்ட   நடிகர்கள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Most Awaited #OsarattumPathuThala from #PathuThala OUT NOW

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்