சிம்புவின் மாஸ் போஸ்டர்.. ‘தக்லைஃப்’ படத்தின் சூப்பர் அப்டேட்..!

Mahendran
புதன், 8 மே 2024 (10:29 IST)
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் ‘தக்லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் சிம்பு இணைந்து உள்ளார் என்றும் அவருடைய காட்சிகளின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது என்ற செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம்.

இருப்பினும் சிம்பு இந்த படத்தில் இணைந்ததை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில் இன்று காலை 10 மணிக்கு இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டது. அந்த வகையில் சற்று முன் சிம்பு இந்த படத்தில் இணைந்துள்ளதை புதிய போஸ்டர் ஒன்றின் மூலம் ‘தக்லைஃப்’ படத்தின் குழுவினர் அறிவித்துள்ள நிலையில் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சிம்புவின் அட்டகாசமான லுக் மற்றும் ஸ்டைலான போஸ் உள்ள இந்த போஸ்டர் சிம்பு ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது என்றும் இந்த போஸ்டரை சிம்பு ரசிகர்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் துல்கர் சல்மான், ஜெயம் ரவி, திரிஷா, அசோக் செல்வன், நாசர், வையாபுரி, அபிராமி உள்பட ஒரு நட்சத்திர கூட்டமே நடித்து வரும் நிலையில் தற்போது சிம்பவும் இணைந்து உள்ளதை அடுத்து இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்