நீ தலைவன் ஆகனும்ன்னா என்னை கொன்னுடுவியா? சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ டிரைலர்!

Webdunia
சனி, 3 செப்டம்பர் 2022 (08:30 IST)
சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் நேற்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக இந்த படத்தின் டிரைலர் 2 நிமிடங்கள் உள்ளன என்பதும் அதில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மற்றும் சென்டிமென்ட் காட்சிகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது
 
சாதாரண இளைஞன் ஒரு கொள்ளைக்கூட்டத்தில் இணைந்து படிப்படியாக உயர்ந்து டான் ஆகும் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் சிம்பு வெவ்வேறு தோற்றங்களில் நடித்துள்ளார் என்பதும் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் கொண்ட இந்த படம் கௌதம் மேனனின் ஸ்டைலில் உருவாக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஏஆர் ரகுமான் இசையில் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிய இந்த படம் நிச்சயம் சிம்புவின் மேலும் ஒரு வெற்றி படமாக இருக்கும் என்று  என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
நேற்று நடைபெற்ற டிரைலர் மற்றும் ஆடியோ ரிலீஸ் விழாவில் கமல்ஹாசன் உள்பட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்