நான் கர்ப்பமாக இருப்பதை சொன்னால் வாய்ப்பு கிடைத்திருக்குமா? – ஸ்ரேயா ஓபன் டாக்!

Webdunia
வியாழன், 15 டிசம்பர் 2022 (09:55 IST)
தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக விளங்கியவர் ஸ்ரேயா. ரஜினியோடு சிவாஜி படத்தில் நடித்ததை அடுத்து முன்னணி கதாநாயகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்து வந்தார். இடையில் பெரிய சம்பளத்துக்காக வடிவேலுவின் இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடினார். அதன் பிறகு அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.

ஒரு கட்டத்தில் மற்ற மொழிகளிலும் வாய்ப்புகள் குறைய வெளிநாட்டுக் காதலரை திருமணம் செய்துகொண்டு பாரினிலேயே செட்டில் ஆகிவிட்டார். அவர்களுக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ராதா என்ற பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறக்கும் வரை ஸ்ரேயா தான் கர்ப்பமாக இருப்பதை அறிவிக்கவே இல்லை.

இந்நிலையில் இப்போது அதுகுறித்து பேசியுள்ள ஸ்ரேயா “நான் அதை வெளிப்படுத்தி இருந்தால், எனக்கான சினிமா வாய்ப்புகள் கிடைக்க நீண்ட நாட்கள் ஆகுமோ என நான் சந்தேகத்தில் இருந்தேன். மேலும் அந்த நேரத்தை முழுக்க முழுக்க என் குழந்தைக்காக நான் ஒதுக்கி இருந்தேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்