சன் பிக்சர்ஸ் வெளியிட்ட ‘ஜெயிலர்’ அப்டேட்: புகைப்படம் வைரல்

Webdunia
வியாழன், 17 நவம்பர் 2022 (18:24 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் ஜெயிலர் திரைப்படத்தை நெல்சன் இயக்கி வருகிறார் என்பதும் அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது தெரிந்ததே
 
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் முக்கிய அப்டேட்டை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது 
 
இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்
 
இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்பட ஒருசிலர் நடித்து வரும் நிலையில் தற்போது சிவராஜ்குமார் இணைந்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்