தனுஷின் ‘வாத்தி’ புதிய ரிலீஸ் தேதி இதுதான்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

Webdunia
வியாழன், 17 நவம்பர் 2022 (17:43 IST)
தனுஷ் நடித்த ‘வாத்தி’ திரைப்படம் டிசம்பர் 2ஆம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை மாற்ற படக்குழுவினர் முடிவு செய்ததாக கூறப்பட்டது.
 
இந்த நிலையில் சற்று முன் ‘வாத்தி’ திரைப்படம் 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர்கள் இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த ஆண்டு தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெற்றி பெற்ற நிலையில் அடுத்த ஆண்டு ‘வாத்தி’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
தனுஷ் ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ள இந்த படத்தில் சாய்குமார், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இந்த படம் உருவாகியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்