உன் கூட நடிச்சது ஒரு குத்தமா...? சமந்தா மாதிரி பொண்ணு கிடைத்தால் தான் கல்யாணமாம்!

Webdunia
சனி, 8 பிப்ரவரி 2020 (18:39 IST)
நடிகர் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இருந்த 96 படம் அமோக வரவேற்பை பெற்றதோடு கலெக்ஷனிலும் கல்லா கட்டியது. இப்படத்தில் அமோக வெற்றியை கண்டு பிற மொழி திரைத்துறையினர் தங்கள் மொழிகளில் 96 படத்தை ரீமேக் செய்ய முயற்சித்தனர்.
 
அந்த வகையில் தற்போது தெலுங்கில் நடிகை சமந்தா மற்றும் ஷர்வானந்த் நடிப்பில் 96 படத்தின் ரீமேக் உருவாகி வருகிறது.  நடிகர் ஷர்வானந்த் தமிழில் காதல்னா சும்மா இல்லை, எங்கேயும் எப்போதும், நாளை நமதே, JK எனும் நண்பனின் வாழ்க்கை போன்ற பரீட்சியமான படங்களில் நடித்துள்ளார். 
 
இவர் தற்போது தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருகிறார். ஜானு படத்தின் மூலம் உச்சகட்ட வளர்ச்சியை அடைவார் என அக்கட தேசத்து சினிமா பிரபலங்கள் கணித்து வருகின்றனர். சமீபத்தில் இப்படத்தை குறித்து எடுக்கப்பட்ட பேட்டி ஒன்றில், மஜிலி திரைப்படத்தில் இருக்கும் சமந்தா போன்ற பெண்ணை தான் திருமணம் செய்யவிருப்பதாக கூறியுள்ளார். அந்த படத்தில் சமந்தா குடும்ப குத்துவிளக்காக கணவனே கண் கண்ட தெய்வம் என இவருக்கும் பெண் போல் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்