பிச்சை எடுத்தாவதும் பகிர்ந்து கொடுப்பேன் - நடிகர் பிரகாஷ்ராஜ்

Webdunia
சனி, 16 மே 2020 (15:22 IST)
கொரோனாவால் உலகம் முழுவதும் ஸ்தம்பித்துப் போய் உள்ளது. இந்நிலையில் வரும் மே 17 ஆம் தேதி வரை மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்நிலையில், ஏழை எளிய மக்களுக்கு திரையுலக நட்சத்திரங்களும், தொழிலதிபர்களும் அரசுடன் இணைந்து உதவி செய்து வருகின்றனர்.

இதுகுறித்து , நடிகர் பிரகாஷ் ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து கூறியுள்ளார்.

அதில், நான் பிச்சை எடுத்தாவது கடன் வாங்கியவதும் பகிர்ந்து  பிறருக்குக் கொடுப்பேன். அவர்கள் என் வீட்டுக்கு  வந்து, ஒரு நம்பிகைக்கு உரிய மனிதனை சந்தித்து விட்டு தங்கள் வீட்டை அடைந்ந்தோம் என்று சொல்வார்கள். வாழ்க்கைக்கு மீண்டும் உயிர் கொடுப்போம் என தெரிவித்துள்ளார்.

கொரோனா ஆரம்ப காலத்தில் தன் வீட்டில் பணிபுரிபவர்களுக்கு தங்க இடமும், உணவும் உணவுப் பொருட்களும் கொடுத்து உபசரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்