செல்வராகவனின் ‘பகாசூரன்’ செகண்ட் சிங்கிள் பாடல் ரிலீஸ்!

Webdunia
திங்கள், 17 அக்டோபர் 2022 (17:19 IST)
செல்வராகவனின் ‘பகாசூரன்’ செகண்ட் சிங்கிள் பாடல் ரிலீஸ்!
செல்வராகவன் நடிப்பில் மோகன்ஜி இயக்கத்தில் உருவான ‘பகாசூரன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன.
 
இந்த படம் அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது 
 
இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் இரண்டாவது பாடல் காத்ம்மா என்ற பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. சாம் சிஎஸ் கம்போஸ் செய்த இந்த பாடலை அவரே பாடியுள்ளார் என்பதும் இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
செல்வராகவன், நட்டி நட்ராஜ், மன்சூர் அலிகான், தேவதர்ஷினி உள்பட பலரது நடிப்பில் உருவான இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

Edited by Mahendran
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்