மீண்டும் செல்வா சாருடன் இணைந்து பணிபுரிய ஆசை- பிரபல இயக்குனர் டுவீட்

புதன், 12 அக்டோபர் 2022 (16:01 IST)
'பகாசூரன்'' படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வந்த   நிலையில், செல்வராகவன் பற்றி ஒரு பதிவிட்டுள்ளார் இயக்குனர் மோகன் ஜி.

தமிழ்சினிமாவில் பிரபல இயக்குனர்  மோகன் ஜி சத்ரியன். இவர் பழைய வண்ணாரப்பேட்டை,  திரவுபதி, ருத்ர தாண்டவம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இதில்,  திரவுபதி படம்  நடிகர் அஜித்தின் மைத்துனர் ரிச்சர்ட் ரிஷி – சவுந்தர்யா  நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகி வசூல் குவித்தது. இதனால், இவரது அடுத்தடுத்த படங்கள் மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இந்த நிலையில்,   மோகன் ஜி இயக்கத்தில் உருவாகிவரும் பகாசூரன் படத்தில் இடம்பெற்ற #SivaSivayam முதல் சிங்கிலை அவரது முதல் பட ஹீரோ ரிச்சர்ட் ரிஷி  21 ஆம் தேதி வெளியிட்டார்.

ALSO READ: ''பகாசூரன்'' பட 2 வது சிங்கில் #Kaathama பாடலில் மன்சூர் அலிகான் டான்ஸ்!
 
இந்த நிலையில், பகாசூரன் திரைப்படத்தின் இடம்பெற்றுள்ள 2 ஆம் பாடல் #Kaathama   பாடல் விரைவில் ரிலீஸாகவுள்ளதால், இப்பாடலின் ஒத்திகையில் நடிகர் மன்சூர் அலிகான் ஈடுபடும் வீடியோவை  இயக்குனர் மோகன் ஜி தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, இதன் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தினார்.

இந்த நிலையில்,  இப்படத்தின் இயக்குனர் மோகன் ஜி தன் டுவிட்டர் பக்கத்தில்,'' டப்பிங் பணிகள் முடிந்தது.. இந்த மாமனிதருடன் பணிபுரிந்த நாட்கள் மறக்க முடியாத நாட்கள்.. மீண்டும் செல்வா சாருடன் இணைந்து பணிபுரிய ஆசை.. இனிமையான, எளிமையான மாமனிதர் இவர்.. நன்றி @selvaraghavan சார் ''என்று பதிவிட்டுள்ளார்.

இதன்படி, தன் அடுத்தபடத்திலும் இயக்குனர் செல்வராகவனை  மோகன் ஜி நடிக்க வைப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
 
Edited by Sinoj

டப்பிங் பணிகள் முடிந்தது.. இந்த மாமனிதருடன் பணிபுரிந்த நாட்கள் மறக்க முடியாத நாட்கள்.. மீண்டும் செல்வா சாருடன் இணைந்து பணிபுரிய ஆசை.. இனிமையான, எளிமையான மாமனிதர் இவர்.. நன்றி @selvaraghavan சார் ❤️ pic.twitter.com/x9mlMGDjhD

— Mohan G Kshatriyan (@mohandreamer) October 11, 2022

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்