சரோஜா பட குத்தாட்ட நடிகைக்கு கல்யாணமாகி இவ்வளவு அழகான குழந்தை இருக்கிறதா.!

Webdunia
வெள்ளி, 1 மார்ச் 2019 (14:59 IST)
குறும்பு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை நிகிதா. அதனைத்தொடர்ந்து வெற்றிவேல் சக்திவேல், சத்ரபதி போன்ற படங்களில் நடித்திருந்தும் ஹீரோயின் வாய்ப்புகள் அமையவில்லை. 


 
நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் கடந்த 2008ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ''சரோஜா'' படத்தில், ''கோடான கோடி...'' என சம்பத் உடன் கவர்ச்சி குத்தாட்டம் போட்டு ரசிகர்களை கிறங்கடிக்க செய்தார். அதன்பின் கார்த்தியின், ''அலெக்ஸ் பாண்டியன்'' படத்தில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக நடித்தார். 
 
பிறகு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் பெரிதாக கிடைக்காததால் கன்னட படத்தில் தலைகாட்ட ஆரம்பித்தார். அங்கு போன வேகத்தில்,  காட்டிய கவர்ச்சியில் ஓஹோ ஹோன்னு  பேமஸ் ஆனவர் கன்னட நடிகர் தர்ஷன் என்பவருடன் கள்ளத் தொடர்பில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டார். 
 
பிறகு கன்னட படங்களில் நடிப்பதற்கு கன்னட திரைப்பட சங்கம்  3 ஆண்டுகள் தடை விதித்தது. இதனால் மனமுடைந்து  தெலுங்கு , மலையாளம்,  தமிழ்  போன்ற மற்ற மொழி படங்களில் நடித்து வந்த நிகிதா 2017 ஆம் ஆண்டு கங்கா சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 


 
இந்நிலையில் தற்போது நிகிதா கங்கா தம்பதியருக்கு ஒருஅழகான பெண் குழந்தையும் இருக்கிறது. சமீபத்தில் நிகிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகனுடன் இருக்கும் கியூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்