அந்த வகையில் நாமக்கல்லில் நடைபெற்ற விஜய் பிறந்த நாள் முன்னிட்டு நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் மின்சார துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் மற்றும் நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சுந்தரம், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய அமைச்சர் தங்கமணி, 'ஜெயலலிதா முதலமைச்சர் ஆவதற்கு ஆதரவு தெரிவித்த விஜய் ரசிகர்கள், தற்போதும் தங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொண்டார். ரஜினி, கமல் இருவருமே தமிழக அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் விஜய் ரசிகர்களை அதிமுக வளைக்க திட்டமிடுவதாக கூறப்படுகிறது.