கடைசி நேர சொதப்பல்… வெளிநாட்டு விநியோகஸ்தர்கள் அதிருப்தி!

Webdunia
செவ்வாய், 18 அக்டோபர் 2022 (15:38 IST)
கார்த்தி நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் சர்தார் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே. அதே போல சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் படமும் அதே நாளில் ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் சர்தார் படத்துக்கு பிரின்ஸ் படத்தைவிட அதிக திரைகளில் வெளியாகிறதாம். அதற்குக் காரணம் சர்தார் படத்தை வெளியிடும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம்தான் என்று சொல்லப்படுகிறது. தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்களை வெளியிட்டு வருவதால் அந்த நிறுவனம் வெளியிடும் படமான சர்தார் படத்தையே அதிக எண்ணிக்கையில் ரிலீஸ் செய்கிறார்களாம்.

இந்நிலையில் ரிலீஸ் நெருங்கி வரும் நிலையில் இன்னும் வெளிநாட்டுக்கு கண்டெண்ட் அனுப்பவில்லையாம். இதனால் அங்கு சென்சார் பெற்று குறித்த நேரத்தில் ரிலீஸ் செய்வதில் சிக்கல் இருக்கும் என்று விநியோகஸ்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளார்களாம். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்