புலி வாலை பிடித்த சந்தானம்… இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ!

Webdunia
திங்கள், 26 டிசம்பர் 2022 (08:52 IST)
சந்தானம் இப்போது கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட வெளிநாட்டுக்கு சென்று அங்கிருந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு சர்வைவல் ஆகிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இப்போது சந்தானம் மேயாத மான் மற்றும் ஆடை ஆகிய படங்களின் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் அவர் நடித்த குலுகுலு திரைப்படம் படுதோல்வி அடைந்தது.

அதையடுத்து நடித்த ஏஜெண்ட் கண்ணாயிரம் படமும் தோல்விப் படமாக அமைந்தது. இதன் மூலம் சந்தானத்தைக் கதாநாயகனாக ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தெளிவாகியுள்ளது. ஆனால் பிடிவாதமாக கதாநாயகனாகதான் நடிப்பேன் என சந்தானம் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாட வெளிநாட்டுக்கு சென்றுள்ள அவர், அங்கிருந்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் நிஜமான புலி அருகில் உட்கார்ந்திருக்கும் சந்தானம், அந்த புலியின் வாலைப் பிடித்து பார்க்கிறார். அப்போது புலியின் பயிற்சியாளர் அதை தலையில் தட்டி எழுப்ப புலி உறுமுகிறது. அதைப் பார்த்து சந்தானம் லேசாக அதிர்ச்சியாகிறார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்