சந்தானத்தின் ‘தில்லுக்கு துட்டு’: இரண்டாம் பாகம் உருவாகிறது…

Webdunia
வெள்ளி, 2 மார்ச் 2018 (11:33 IST)
சந்தானம் நடிப்பில் வெளியான ‘தில்லுக்கு துட்டு’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. 
‘லொள்ளு சபா’ புகழ் ராம்பாலா இயக்கத்தில் வெளியான படம் ‘தில்லுக்கு துட்டு’. 2016ஆம் ஆண்டு ரிலீஸான இந்தப் படத்தில், சந்தானம் ஹீரோவாக  நடித்திருந்தார். அஞ்சால் சிங், கருணாஸ், ஆனந்த்ராஜ், செளரப் சுக்லா உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். எஸ்.தமன் மற்றும் கார்த்திக் ராஜா  இருவரும் இசையமைத்தனர்.
 
சூப்பர் ஹிட்டான இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகி வருகிறது. சந்தானம் ஜோடியாக தீப்தி ஷெட்டி நடிக்கிறார். தீபக் குமார்பதி ஒளிப்பதிவு  செய்ய, ஷபிர் இசையமைக்கிறார். ஹைதராபாத்தில் தொடர்ந்து 15 நாட்களுக்கு இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்