சந்தானம் நடிக்கும் இங்க நாங்கதான் கிங் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

vinoth
வெள்ளி, 22 மார்ச் 2024 (07:08 IST)
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு சர்வைவல் ஆகிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் அவர் நடித்த டிடி ரிட்டர்ன்ஸ் மற்றும் வடக்குப்பட்டி ராமசாமி ஆகிய படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதையடுத்து சந்தானம் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார்.

அப்படி சந்தானம் நடிப்பில் அடுத்து உருவாகும் இங்க நாங்கதன் கிங்கு என்ற படத்தை தயாரிப்பாளர் அன்புச்செழியன் தயாரித்து வருகிறார். இந்த படத்தை இந்தியா பாகிஸ்தான் பட இயக்குனர் ஆனந்த் இயக்கயுள்ளார்.

டி இமான் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை உரிமையை சரிகம பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் மார்ச் அல்லது ஏப்ரலில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்