தனுஷின் ‘இளையராஜா’ படத்தில் இணைந்த கமல்ஹாசன்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Mahendran

வியாழன், 21 மார்ச் 2024 (12:31 IST)
தனுஷ் நடிக்கும் இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது என்பதும் ‘இளையராஜா’ என டைட்டில் வைக்கப்பட்ட இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நேற்று வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது என்பதும் தெரிந்தது. 
 
மேலும் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் விழாவில் இளையராஜா, கமல்ஹாசன், தனுஷ், பாரதிராஜா, அருண் மாதேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று மாலை நடந்த சங்கீதம் சீனிவாசராவ் அவர்களை கௌரவிக்கும் விழாவில் கமல்ஹாசன் பேசினார். அ
 
ப்போது இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் திரைக்கதையை தான் எழுதுவதாக அவர் அறிவித்தார். இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அடுத்து இந்த படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இளையராஜா கேரக்டரில் தனுஷ் நடிக்க இருக்கும் நிலையில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், பாரதிராஜா, ஏஆர் ரஹ்மான்  உள்ளிட்ட கேரக்டர்களும் இந்த படத்தில் இருப்பதாகவும் அந்தந்த கேரக்டரில் அவரவர்களே நடிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்