சந்தானம் ஜாமீன் மனு: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

Webdunia
வெள்ளி, 13 அக்டோபர் 2017 (15:58 IST)
பிரபல வழக்கறிஞர் மற்றும் பாஜக பிரமுகர் பிரேம் ஆனந்த்தை தாக்கிய வழக்கில் சந்தானம் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று சென்னை ஐகோர்ட்டில் நடந்த நிலையில் சந்தானத்திற்கு நிபந்தனை ஜாமீன் அளித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.



 
 
முன்னதாக சந்தானத்திற்கு முன் ஜாமீன் வழங்க பிரேம் ஆனந்த் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் ஒருசில நிபந்தனைகளை விதித்து சந்தானத்திற்கு சென்னை ஐகோர்ட் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
 
இந்த முன் ஜாமீன் காரணமாக சந்தானம் மீண்டும் படப்ப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார். இந்த நிலையில் நாளை காலை அவர் நடித்த 'சக்க போடு போடு ராஜா' படத்தின் டிரைலர் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்