மணக்கும் காமெடிக்கு இன்றாவது ஜாமீன் கிடைக்குமா?

Webdunia
வெள்ளி, 13 அக்டோபர் 2017 (13:30 IST)
கொடுக்கல் – வாங்கல் தகராறில் ஈடுபட்ட வழக்கில், மணக்கும் காமெடி நடிகருக்கு இன்றாவது ஜாமீன் கிடைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.


 

 
மணக்கும் காமெடி நடிகரும், ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவரும் இணைந்து, அடுக்கு மாடிக் குடியிருப்பு கட்ட முடிவு செய்தனர். இதற்காகப் பெரும்தொகையை ரியல் எஸ்டேட் அதிபரிடம் கொடுத்துள்ளார் மணக்கும் காமெடி. ஆனால், அவர் சொன்னபடி வேலையை ஆரம்பிக்கவில்லை. எனவே, தான் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டுள்ளார் மணக்கும் காமெடி. அவரும் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுக்க, குறிப்பிட்ட தொகை நிலுவையில் இருந்திருக்கிறது. அதைக் கேட்பதற்காக தன்னுடைய உதவியாளருடன் ரியல் எஸ்டேட் அதிபரைச் சந்தித்திருக்கிறார். ரியல் எஸ்டேட் அதிபரின் வக்கீலும், பாஜக பிரமுகருமான ஒருவரும் அங்கு இருந்துள்ளார்.

அப்போது இருதரப்புக்கும் கைகலப்பாக, காயம்பட்ட இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருதரப்புமே போலீஸிலும் புகார் கொடுத்தனர். எதிர்த்தரப்பு பாஜக பிரமுகர் என்பதால், மணக்கும் காமெடி மீது கைது நடவடிக்கை பாயலாம் என்ற நிலை இருந்தது. எனவே, தலைமறைவான மணக்கும் காமெடி, முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை, நேற்று நீதிமன்றத்திற்கு வந்தது. வழக்கை இன்று ஒத்தி வைத்தனர் நீதிபதிகள். இன்றாவது மணக்கும் காமெடிக்கு முன் ஜாமீன் கிடைக்குமா இல்லை கைதாவாரா என்பது தெரியவில்லை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்