80 வயது பாட்டியின் தோற்றத்தில் சமந்தா?

Webdunia
ஞாயிறு, 12 ஆகஸ்ட் 2018 (13:22 IST)
நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வருகிறார். 
திருமணத்திற்கு பிறகு இவர் நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம், நடிகையர் திலகம், இரும்புத்திரை ஆகிய படங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் சீமராஜா, சூப்பர் டீலக்ஸ், யூ-டர்ன் ஆகிய படங்கள் வெளியீட்டிற்காக காத்திருக்கிறது.  
 
குறிப்பாக சீமராஜா, யு டர்ன் ஆகிய இரு படங்களும் வருகிற செப்டம்பர் 18 ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு படங்கள் வெளியீட்டிற்கு பிறகு, சூப்பர் டீலக்ஸ், கணவர் நாகசைதன்யாவுடன் இணைந்து ஒரு படத்திலும் நடிக்கிறார். 
 
அதற்கு அடுத்ததாக கொரிய படத்தின் தழுவலாக ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வருகிறது. இந்த படத்தில் சமந்தா 80 வயது பாட்டியாக நடிக்க இருக்கிறார் என்றும் தகவல் தெரிவிக்கின்றன. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்