தொப்புளில் கடுக்கன் மாட்டிக்கொள்வது குறித்து கேட்ட ரசிகருக்கு சமந்தா பதில்!

Webdunia
செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (08:56 IST)
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு உத்தரவினால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர். அந்தவகையில் சமந்தா வீட்டில் இருந்தபடியே, சிறிய அளவிலான முட்டைகோஸை வளர்த்து அறுவடை செய்தார்.

இந்நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த சமந்தாவிடம் ஒருவர்,  " தொப்புளில் வளையம் குத்துவது குறித்து கருத்து கேட்டார். அதற்கு பதில் அளித்த  சம்மு, " நான் அதை ஒருபோதும் செய்ய மாட்டேன். நீங்களும் அதை பற்றி யோசித்தால் விட்டுவிடுங்கள் என்று அக்கறையுடன் அறிவுரை கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்