நாக சைதன்யாவுக்கும், சமந்தாவுக்கும் வருகிற அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற இருக்கிறது. எனவே, கையில் உள்ள படங்களை அவசரம் அவசரமாக முடித்துக் கொடுத்து வருகிறார். ஆனாலும், சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் உரையாடுவதை மட்டும் விடாமல் கடைப்பிடித்து வருகிறார். ட்விட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு சமந்தா அளித்த பதில்கள் இவை:
செலிபிரட்டி அந்தஸ்து என்பது வரமா, சாபமா?
செலிபிரட்டி என்பது மிகப்பெரிய வரம். வேறெந்த வேலையிலும் கிடைக்காத வெகுமதி அது.
நாக சைதன்யாவின் செல்போனை நீங்கள் சோதனையிடுவீர்களா?
ஹா… ஹா… நிச்சயமாக இல்லை. ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி… அடுத்தவரின் செல்போனை நோண்டுவது கேவலமான செயல்.
நீங்களும், நாக சைதன்யாவும் பெரும்பாலும் எதைப்பற்றி பேசிக் கொள்வீர்கள்?
என்ன டின்னர் சாப்பிடலாம் என்பதைப் பற்றித்தான்.
உங்கள் ரசிகர்களைப் பற்றி ஒரு வார்த்தையில் சொல்லுங்க…
ஒற்றை வார்த்தையில் முடித்துவிடக் கூடிய சாதாரணமானவர்கள் அல்ல அவர்கள்.
மகேஷ் பாபு பற்றி எங்களுக்குத் தெரியாத விஷயம் ஏதாவது ஒன்றைக் கூறுங்கள்…
அவருடன் இருந்தால் மிகச்சிறப்பாக பொழுது போகும். உங்களுக்குத் தைரியம் இருந்தால், அவர் இருக்கும் இடத்தில் நீங்கள் சிரிக்காமல் இருந்து பாருங்கள்.
உங்களுடைய கனவு ரோல் என்ன?
சமந்தாவாகவே இருப்பது.
ராம் சரணுடன் பணியாற்றிய அனுபவம் எப்படி இருந்தது?
அந்தப் படத்துக்கு நிறைய தடைகள் வந்தபோதும், அவை எல்லாவற்றையும் தகர்த்துவிட்டார். உங்களைப் போலவே அவரைத் திரையில் காண நானும் ஆவலாக இருக்கிறேன்.
தெலுங்குப் படவுலகில், சமீபத்தில் உங்களை ஈர்த்த ஹீரோயின் யார்?
எல்லோரையும் பிடிக்கும். ரகுல் ப்ரீத்சிங், ரெஜினி, ராஷி, லாவண்யா எல்லோருமே நண்பர்கள் தான்.
காஜல் அகர்வாலைப் பற்றி ஒரு வார்த்தை…