பாலிவுட் நடிகர்கள் சல்மான் கான் & அக்‌ஷய் குமாருக்கு உச்சபட்ச பாதுகாப்பு… மகாராஷ்டிரா அரசு முடிவு!

Webdunia
புதன், 2 நவம்பர் 2022 (10:17 IST)
பாலிவுட் நடிகர்களுக்கு கொலைமிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் லாரன்ஸ் பிஸ்னோய் என்ற கொலைக்குற்றவாளி தரப்பால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனால் அவருக்கு இப்போது ஒய் ப்ளஸ் பாதுகாப்பை கொடுக்க மகாராஷ்டிரா உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

அதே போல இதுபோன்ற மிரட்டல்கள் உள்ள அக்‌ஷய் குமார் மற்றும் அனுபம் கேர் ஆகியோருக்கு எக்ஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு சுழற்சி முறையில் காவலர்கள் 24 மணிநேரமும் பாதுகாப்பு வழங்குவார்கள்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்