பாகுபலிக்கு பிறகு ஹிட் கொடுக்க முடியாமல் பிரபாஸ் தவித்து வரும் நிலையில் சமீபத்தில் ரிலீஸான அவரின் ஆதிபுருஷ் திரைப்படம் மோசமான விமர்சனங்களையும் கேலிகளையும் சந்தித்தது. ஆனால் அடுத்து பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அதற்கு முக்கியக் காரணம் இந்த படத்தை இயக்குவது கே ஜி எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் என்பதுதான். இந்த படத்தை கேஜிஎஃப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தயாரிக்கிறார்.
இந்த படம் செப்டம்பர் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்த நிலையில் சமீபத்தில் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் புதிய ரிலீஸ் தேதியும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.மேலும் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டதற்கு சலார் திரைப்படத்தின் ஓடிடி மற்றும் டிஜிட்டல் உரிமையை அவர்கள் சொல்லும் விலைக்கு வாங்க எந்த ஓடிடி நிறுவனமும் முன்வராததும் ஒரு காரணம் என சொல்லப்பட்டது.
இந்நிலையில் இப்போது படத்தின் ஓடிடி பிஸ்னஸ் முடிந்துள்ளதாகவும், அதனால் விரைவில் சலார் படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் சொல்லப்படுகிறது.