பிரபாஸின் அடுத்த படத்தில் நயன்தாரா… பேன் இந்தியன் படமாக உருவாகும் கண்ணப்பர்!

வியாழன், 14 செப்டம்பர் 2023 (08:05 IST)
சமீபகாலமாக புராண கால படங்கள் இந்திய சினிமாவில் அதிகளவில் உருவாகி வருகின்றன. சமீபத்தில் ரிலீஸான ஆதிபுருஷ் உள்ளிட்ட திரைப்படங்கள் பரவலான கவனத்தைப் பெற்றன. இதையடுத்து இப்போது சிவனைப் பற்றிய கண்ணப்பர் என்ற படம் பிரம்மாண்டமாக உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது.

விஷ்ணு மஞ்சுவின் கண்ணப்பர் என்ற  படத்தில் சிவன் வேடத்தில் நடிக்க பிரபாஸிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த படத்தில் மோகன்லால் மற்றும் சிவராஜ் குமார் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. இந்தப் படத்தை முகேஷ் சிங் இயக்குகிறார். நுபுர் சனோன் நாயகியாக நடிக்கிறார். ஏற்கனவே ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸ் ராமர் வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்