சலார் படத்தின் க்ளைமேக்ஸ் ரீஷூட் செய்கிறாரா பிரசாந்த் நீல்?

Webdunia
செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (19:02 IST)
பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அதற்கு முக்கியக் காரணம் இந்த படத்தை இயக்குவது கே ஜி எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் என்பதுதான்.  இந்த படத்தை கேஜிஎஃப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தயாரிக்கிறார்.

இந்த படம் செப்டம்பர் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வி எஃப் எக்ஸ் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் முடியாத காரணத்தால் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து இப்போது டிசம்பர் 22 ஆம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் சில காட்சிகளை இயக்குனர் பிரசாந்த் நீல் ரிஷூட் செய்து படத்தில் இணைக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதில் க்ளைமேக்ஸ் காட்சியும் அடக்கம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்