சபாஷ் நாயுடு படத்தைத் தொடங்குவதில் புதிய சிக்கல்.. இந்த நடிகரால்தானா?

Webdunia
செவ்வாய், 11 அக்டோபர் 2022 (16:10 IST)
சபாஷ் நாயுடு திரைப்படத்தை தொடங்கி சில நாட்கள் படப்பிடிப்பை நடத்திய நிலையில் பின்னர் கிடப்பில் போடப்பட்டது.

லைகா தயாரிப்பில் கமல்ஹாசன் எழுதி இயக்குவதாக தொடங்கப்பட்ட ‘சபாஷ் நாயுடு’ திரைப்படம் தொடங்கப்பட்டு பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டது. அமெரிக்காவில் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் கமலுக்கு அப்போது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் மீண்டும் தொடங்கப் படாமலேயே கிடப்பில் இருந்தது.

இந்த படத்தைப் பற்றி அனைவரும் மறந்தே விட்ட நிலையில் இப்போது மீண்டும் இந்த படம் தொடங்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக லைகா மற்றும் கமல் ஆகிய இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இப்போது படத்தை தொடங்குவதில் புதிய சிக்கல் ஒன்று எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் பிரம்மானந்தம் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இப்போது அவர் அதிகளவில் படங்களில் நடிப்பதில்ல்லை என்ற முடிவை எடுத்துள்ளதாகவும், அதனால் அவர் இந்த படத்தில் நடிக்க விருப்பப்பட வில்லை என்று சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்