21 கிலோ எடையைக் குறைத்துள்ள சிம்பு? இணையத்தில் பரவும் செய்தி உண்மையா?

Webdunia
வியாழன், 24 செப்டம்பர் 2020 (16:28 IST)
நடிகர் சிம்பு மாநாடு படத்துக்காக 21 கிலோ எடையை குறைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நடிகர் சிம்பு சமீபகாலமாக மிகவும் குண்டாகி காணப்படுகிறார். இதற்காக அவர் தாய்லாந்து எல்லாம் சென்று எடையைக் குறைக்க முயற்சி செய்தார். ஆனால் ஒன்றும் பயன் இல்லை. சமீபத்தில் அவர் நடித்த செக்க சிவந்த வானம், வந்தா ராஜாவாதான் வருவேன் ஆகிய படங்களில் குண்டு உடம்புடனேயே நடிக்க ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளானார்.

இந்நிலையில் இப்போது லாக்டவுன் நாட்களில் கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை மூலம் உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்து வருவதாக சொல்லப்பட்டது. அதன் காரணமாக் 21 கிலோ எடையைக் குறைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இந்த முறை சிம்புவின் புகைப்படத்தைப் பார்க்காமல் அதை நம்ப ரசிகர்கள் தயாராக இல்லை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்