சிம்புவிடம் கதை சொல்லி ஓகே பண்ணிய இயக்குனர்… அதிர்ச்சியில் மற்ற இயக்குனர்கள்!

சனி, 19 செப்டம்பர் 2020 (13:08 IST)
நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் சுசீந்தரன் ஒரு கிராமத்துக் கதையை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் சிம்பு இப்போது வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்குப் பிறகு அவர் மிஷ்கின், சேரன் உள்ளிட்ட பல இயக்குனர்களிடம் கதை கேட்டு ஓகே செய்துள்ளார். இந்நிலையில் இப்போது இயக்குனர் சுசீந்தரன் சிம்புவிடம் கிராமியக் கதை ஒன்றை சொல்லி அதை ஓகே வாங்கியுள்ளாராம்.

மாநாடு படத்துக்குப் பிறகு சிம்பு சுசீந்தரன் இயக்கத்தில்தான் நடிப்பார் என சொல்லப்படுகிறது. இதனால் சிம்புவிடம் கதை சொல்லி காத்திருந்த மற்ற இயக்குனர்கள் அதிர்ச்சியாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. லாக்டவுன் காலத்திலேயே ஜெய்யை வைத்து சுசீந்தரன் மினிமம் பட்ஜெட்டில் ஒரு படத்தை எடுத்து முடித்துள்ளார் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்