சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்?

Sinoj
புதன், 14 பிப்ரவரி 2024 (10:52 IST)
ஏ.ஆர். முருகதாஸ்  இயக்கத்தில் 'எஸ்கே23' என்ற படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது
 
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் ஏ.ஆர்.  முருகதாஸ். இவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து புதிய படத்தில் பணியாற்றுகிறார்.
 
இந்த படத்தை ஸ்பைடர் படத்தின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
 
'எஸ்கே23' படத்தின் ஷூட்டிங்   இன்று  தொடங்கவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், இதுகுறித்து படத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் புகைப்படம் வெளியிடலாம் என தெரிகிறது.

இந்த நிலையில், இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான கன்னட படமான 'சப்த சாகரதாச்சே எல்லோவில்' நடித்ததற்காக நடிகை ருக்மணி வசந்த் எல்லோராலும் பாராட்டப்பட்டார். எனவே அவரது அடுத்த படம் என்ன என்பது பற்றி அறிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர்.

இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்