''காதல் சாவதில்லை...காதலர் தோற்பதில்லை’’-திருமாவளவன்

Sinoj

புதன், 14 பிப்ரவரி 2024 (10:45 IST)
காதலர் தினத்தையொட்டி, விசிக தலைவர் திருமாவளவன் ''காதல் பொய்ப்பதில்லை.ஆதலால், காதலர் தோற்பதில்லை’’ என்று  காதலர் தினத்திற்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.  உலகெங்கும் உள்ள காதலர்கள் இந்த தினத்தை பூக்கள், பூங்கொத்துகள், வாழ்த்துமடல், பரிசுகள் கொடுத்து, தங்கள் அன்பை வெளிப்படுத்தும் விதமாக  கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

பொதுவாக ஹக் டே, கிஸ் டே, பிராமிஸ் டே என விதவிதமான  நாட்கள் இருந்தாலும் காதல் ஜோடிகள் காதலர் தினத்தை ஆர்வத்துடன் கொண்டாடுகின்றனர்.

ஆனால், காதலர் தினத்தை காதலர்கள் மட்டும் தான் கொண்டாட வேண்டுமா என்ன? இத்தினத்தை அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.

இந்தியாவிலும் காதலர்கள், திருமணமான தம்பதிகள் தங்கள் காதலை இத்தினத்தில் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், விடுதலை சிறுத்தைககள் கட்சித் தலைவரும், எம்பியுமான திருமானவளவன் தன் வலைதள பக்கத்தீல்  காதலர் தினத்திற்கு  வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

அதில்,

‘’அன்பின் பெருக்கம் அருள்.
அன்பின் பேராழம் காதல்.

காதல் ஓய்வதில்லை.
காதல் முறிவதில்லை.
காதல் வீழ்வதில்லை.
 காதல் சாவதில்லை.
காதல் பொய்ப்பதில்லை.
ஆதலால்,
காதலர் தோற்பதில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்