சர்ச்சைக்குரிய படத்திற்கு ரூ.25 கோடி அபராதமா? பிரபல நடிகர் விளக்கம்

Webdunia
வியாழன், 11 மே 2023 (21:37 IST)
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் பிரதிவிராஜ் சர்ச்சைக்குரிய படங்களுக்காக அமலாக்கதுறை ரூ.25 கோடி அபராதம் விதித்தது என்ற தகவலுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

மலையாள சினிமாவில் முன்னணி நடிகர் பிரத்விராஜ். இவர் நடிகர், இயக்குனர் எனப் பல பரிமாணங்களை வெளிப்படுத்தி வருகிறார்.

இவர்,தமிழில், கனா கண்டேன், பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, கண்ணாமூச்சி ஏனடா, வெள்ளித்திரை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் இவர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் வெளியான லூசிபர் என்ற படம் சூப்பர் ஹிட்டானது. இப்படம் தெலுங்கிலும் ரீமேக் ஆனது.

இந்த நிலையில்,  ஒரு யூடியூப் சேனலில் சர்ச்சைக்குரிய படங்கள் எடுத்தற்காக பிரதிவிராஜுக்கு ரூ.25 கோடி அபாரம் கட்டும்படி வற்புறுத்தியதாக கூறியிருந்தனர்.

இதற்கு பிரிதிவிராஜ் பதிலளித்துள்ளார். அதில், அபராதம் எதுவும் கட்டவில்லை என்று இந்தச் செய்தியை மறுத்துள்ளார். மேலும், பொய்யான தகவல்கள் பரப்பும் வலைதளங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவிருக்கிறேன் என்று தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தற்போது, இயக்குனர் பிளஸ்சி இயக்கத்தில், ஆடு ஜீவிதம் என்ற படத்தில் பிரதிவிராஜ்  ஆடு மேய்ப்பவர் வேடத்தில்  நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்