ஜப்பானில் கலக்கி வரும் ராஜமௌலியின் ஆர் ஆர் ஆர்… முதல் வார வசூல் இவ்வளவா?

Webdunia
செவ்வாய், 1 நவம்பர் 2022 (10:46 IST)
இயக்குனர் ராஜமௌலி இயக்கி ஜூனியர் என் டி ஆர் மற்றும் ராம்சரண் தேஜா நடித்த ஆர் ஆர் ஆர் திரைப்படம் ஜப்பானில் கடந்த வாரம் ரிலீஸ் ஆனது.

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆல்யா பட், அஜய்தேவ்கன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். பாகுபலி வெற்றிக்குப் பின்னர் உருவான இந்த படம்உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடி ரூ.1000 கோடிக்கும் மேல் வசூலித்தது இந்த படம்.

இந்நிலையில் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் 10க்கும் மேற்பட்ட பிரிவுகளில் போட்டியிடுகிறது. இதையடுத்து படம் ஜப்பானிய மொழியில் டப் செய்யப்பட்டு கடந்த வாரம் ரிலீஸ் ஆனது. இதற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.


இந்நிலையில் ஒரு வாரத்தில் ஆர் ஆர் ஆர் திரைப்படம் இந்திய மதிப்பில் 4 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாம். இந்திய படங்கள் ஜப்பானில் வெளியாகி அதிக முதல் வார கலெக்‌ஷன் கொடுத்த படமாக ஆர் ஆர் ஆர் சாதனைப் படைத்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் முத்து திரைப்படம்தான் இதுவரை ஜப்பானில் அதிக வசூல் செய்த இந்திய படமாக இருந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்