மும்பையில் தயாராகும் எமன்

Webdunia
சனி, 9 ஜூலை 2016 (15:53 IST)
விஜய் ஆண்டனி நடித்த அனைத்துப் படங்களும் வெற்றி. அதிலும் கடைசியான வெளியான பிச்சைக்காரன் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா என்று மூன்று மாநிலங்களில் ஹிட். 


 
 
இதனைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடித்துள்ள சைத்தான் திரைக்கு வருகிறது. அதன் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதால் எமன் படத்தை தொடங்கியுள்ளார்.
 
விஜய் ஆண்டனியின் முதல் படமான, நான் படத்தை இயக்கிய ஜீவா சங்கர் எமன் படத்தை இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடந்து வருகிறது. மியா ஜார்ஜ் நாயகி.
 
விஜய் ஆண்டனியே எமனுக்கும் இசையமைக்கிறார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்