மும்பை வீடு வாங்கிய ராஷ்மிகா: பாலிவுட்டில் பிசி போல...

Webdunia
வியாழன், 25 பிப்ரவரி 2021 (10:09 IST)
சில இந்தி பட வாய்ப்புகளும் தேடி வருவதால் மும்பையில் ஒரு வீடு வாங்கி உள்ளாராம் ராஷ்மிகா மந்தானா. 

 
கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா கன்னட படங்களில் நடித்து வந்த நிலையில் தெலுங்கு சினிமாவில் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த இரண்டு படங்களுக்கு பின்னர் மொழி எல்லையை தாண்டி மக்கள் மனதில் இடம்பெற்றார்.
 
இப்போது கார்த்தியுடன் சுல்தான் படத்திலும், அல்லு அர்ஜூனின் புஷ்பா படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது பாலிவுட்டில் அறிமுகம் ஆகவுள்ளார். ஆம், சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்கும் மிஷன் மஞ்சு படத்தில் நாயகியாக ராஷ்மிகா ஒப்பந்தமாகியுள்ளார். 
 
இதனைத்தொடர்ந்து அமிதாப்பச்சனுடன் டெட்லி படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் சில இந்தி பட வாய்ப்புகளும் தேடி வருவதால் மும்பையில் ஒரு வீடு வாங்கி உள்ளாராம். இன்னும் கோலிவுட்டிற்காக சென்னை மட்டும் தான் ராஷ்மிகா வீடு வாங்கவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்