கமல் நடித்தால் மட்டுமே பாபநாசம் 2- நடிகை ஸ்ரீப்ரியா தகவல்!

வியாழன், 25 பிப்ரவரி 2021 (08:09 IST)
மோகன்லால் நடித்துள்ள த்ருஷ்யம் 2 படம் வெற்றியடைந்ததை அடுத்து அதைப் பல மொழிகளில் ரீமேக் செய்யும் பணிகள் ஆரம்பித்துள்ளன.

கமல்ஹாசன் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான ’பாபநாசம்’ மலையாளத்தில் மோகன் லால் நடித்த திருஷ்யம் படத்தின் ரீமேக். இந்த படம் இந்தி மற்றும் தென்னிந்தியாவின் எல்லா மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. இந்நிலையில் இப்போது திருஷ்யம் 2 படம் வெளியாகி பரவலானப் பாராட்டுகளைப் பெற்றது. இந்நிலையில் தெலுங்கில் அந்த படத்தை இயக்குனர் ஜீத்து ஜோசப்பே இயக்கி வருகிறார். அந்த படத்தை நடிகையும் அரசியல்வாதியுமான ஸ்ரீப்ரியா தயாரித்து வருகிறார். அவரிடம் தான் தமிழ் ரீமேக் உரிமையும் உள்ளது.

இந்நிலையில் தமிழில் கமல் நடித்தால் மட்டுமே பாபநாசம் 2 படத்தை உருவாக்குவோம் என அவர் கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்