எமி ஜாக்சனால் தாமதமாகும் படப்பிடிப்பு? படத்தில் இருந்து விலக்க முடிவு!

வியாழன், 25 பிப்ரவரி 2021 (08:39 IST)
நடிகை எமி ஜாக்சனால் அந்தகன் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாத சூழல் உள்ளதால் அவருக்கு பதிலாக வேறு கதாநாயகிகள் தேடப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

பாலிவுட்டில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ’அந்தாதூன்’ என்ற திரைப் படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் பிரசாந்த் நடிக்க உள்ளார் . அந்தகன் என பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த படத்தை அவரது தந்தை தியாகராஜன் தயாரிக்கும் பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய ஜே ஜே பிரட்ரிக் இயக்க ஒப்பந்தமானார். இந்த படத்தின் ப்ரோமோவை கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியிட்டது படக்குழு. 

படத்தில் நாயகியாக எமி ஜாக்சனும், வில்லியாக நடிக்க சிம்ரனும் ஒப்பந்தம் ஆனார்கள். மற்ற கதாபாத்திரங்களில் நடிக்க யோகி பாபு, கே எஸ் ரவிக்குமார் மற்றும் கார்த்திக் ஆகியோர் ஒப்பந்தம் ஆனார்கள். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு சம்மந்தமாக எந்த முன்னேற்றமும் இல்லை என சொல்லப்படுகிறது. இதற்கு ஒரு முக்கியக் காரணமாக லண்டனில் இருக்கும் எமி ஜாக்சனால் கொரோனா பிரச்சனைகளால் இந்தியாவுக்கு வரமுடியவில்லை என்பதே என சொல்லப்படுகிறது. இதனால் அவருக்கு பதிலாக வேறு கதாநாயகிகளை தேடும் பணியும் மும்முரமாக நடப்பதாக சொலல்ப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்