பாலிவுட் போனதும் ரேஞ்சே மாறிடுச்சு… ராஷ்மிகாவின் சேட்டை!

Webdunia
வியாழன், 7 ஜனவரி 2021 (15:50 IST)
ராஷ்மிகா மந்தனா புதிதாக ரேஞ்ச் ரோவர் கார் வாங்கியுள்ளார். அந்த புகைப்படத்தை இணையத்தில் பகிர அது வைரலாகப் பரவி வருகிறது.

கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா கன்னட படங்களில் நடித்து வந்த நிலையில் தெலுங்கு சினிமாவில் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த இரண்டு படங்களுக்கு பின்னர் மொழி எல்லையை தாண்டி மக்கள் மனதில் இடம்பெற்றார்.   இப்போது கார்த்தியுடன் சுல்தான் படத்திலும், அல்லு அர்ஜூனின் புஷ்பா படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது பாலிவுட்டில் அறிமுகம் ஆகவுள்ளார். ஆம், சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்கும் மிஷன் மஞ்சு படத்தில் நாயகியாக ராஷ்மிகா ஒப்பந்தமாகியுள்ளார்.  

இந்த சந்தோஷமான செய்தியைக் கொண்டாடும் விதமாக ராஷ்மிகா இப்போது புதிதாக ஒரு கோடி ரூபாய் செலவில் ரேஞ்ச் ரோவர் கார் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த காரோடு அவர் எடுத்துகொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட அது இப்போது வைரல் ஆகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்