பெண்களின் மூளை எனக்கு வேண்டாம் – ராம்கோபால் வர்மா சர்ச்சை கமெண்ட்!

வியாழன், 7 ஜனவரி 2021 (12:59 IST)
சர்ச்சைகளின் அரசன் ராம் கோபால் வர்மா தனக்கு பெண்களின் மூளை வேண்டாம் எனக் கூறியது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

இந்திய சினிமாவில் சர்ச்சைக்குப் பெயர் போனவர் ராம் கோபால் வர்மா. சமூக வலைதளங்களில் அவர் பதிவிடும் கருத்துகள் சர்ச்சைய்யாவது வாடிக்கையாகிவிட்டது. இவர் இந்த லாக்டவுனில் வரிசையாக படங்களை இயக்கி தனது ஓடிடி பிளாட்பார்மில் வெளியிட்டு வருகிறார். இவரது படங்கள் எல்லாம் 18+ ஆக இருப்பதால் அனைவரும் பணம் கட்டிப் பார்த்து வருகின்றனர். இதனால் அவரும் தொடர்ந்து படங்களை இயக்கி வருகிறார்.

இப்போது அவர் சசிகலாவின் பயோபிக் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் ‘எனக்கு பெண்களின் உடல்தான் வேண்டும் ; அவர்களின் மூளை தேவையில்லை’ என்று கூறியிருந்தார். இது இப்போது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்