‘லியோ’ வழக்கை ஆரம்பத்திலேயே தள்ளுபடி செய்திருக்க வேண்டும்: சமூக ஆர்வலர் ரங்கராஜன் நரசிம்மன்..!

Webdunia
செவ்வாய், 17 அக்டோபர் 2023 (12:21 IST)
‘லியோ’ வழக்கை ஆரம்பத்திலேயே தள்ளுபடி செய்திருக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் ரங்கராஜன் நரசிம்மன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
இப்படி தேவையில்லாத வழக்குகளை போட்டு நீதிமன்ற நேரத்தை வீணடிக்கிறார்கள்.  இதனால் என்ன லாபம்?  இப்படிப்பட்ட வழக்குகளை ஆரம்பத்திலேயே மாண்புமிகு நீதிபதிகள் தள்ளுபடி செய்திருக்க வேண்டும் என்பது என் கருத்து.  
 
அல்லது, இப்படிப்பட்ட வழக்கை எப்பொழுதும் போல 6 மாதம் தள்ளி வைக்க வேண்டும். அப்படி ஒன்றும் நாடு குடிமுழுகி போகும் வழக்கு இல்லை.
 
உதாரணத்திற்கு, கால்நடைகளை லைசென்ஸ் கொடுக்கப்பட்ட ஸ்லாட்டர் ஹவுசுகளில் கொல்ல வேண்டும்.  பக்ரிதின் பொழுது தெருத்தெருவாக கால்நடைகளை கொல்கின்றனர் என்று நான் தொடுத்த வழக்கை 4 வாரம் ஒத்தி வைத்தார்கள். பக்ரிதின் பொழுது ஆயிரக்கணக்கான கால்நடைகள் சட்டவிரோதமாக எல்லா இடங்களிலும் கொல்லப்பட்டன.
 
இன்று வரை அரசு அதற்கு எதிர்மனு தாக்கல் செய்யவில்லை.
 
இப்படி முக்கியமான வழக்குகளே காத்திருக்கும் பொழுது, கெட்டவார்த்தை பேசும் ஹீரோவின் படத்தை அதிகப்படியான ஷோவுடன் வெளியிடவேண்டும் என்று பணமுடையவர்கள் போடும் வழக்கு காத்திர்க்க வேண்டியது நியாயம்தானே!! 
 
தனிமனிதனின் பணம் சம்பாதிக்க ஏதுவாக தொடுக்கப்படும் வழக்குகளுக்கு நீதிமன்றங்கள் இடம் கொடுக்ககூடாது என்று நான் நினைக்கிறேன்.   
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்